இந்தியாவில் எஜுகேஷன் சம்பந்தப்பட்ட ஸ்டார்ட் அப்கள் 3500 க்கும் மேல் இருக்கின்றன. இவை மாணவர்களுக்கு படிப்பு சொல்லித் தர, மேல் படிப்பிற்கு தயார் செய்ய, போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய என்ற பல வகைகளில் இருக்கின்றன. இந்த வகையில் லீடரான பைஜு என்ற கம்பெனி பில்லியன் டாலர் (7000 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ளது) அளவில் வளர்ந்த விதம் கண்டு, அதை எண்ணத்தில் வைத்து  பல கம்பெனிகள் இந்த துறையில் தோன்ற ஆரம்பித்தன.

Leverage Edu, No Paper Forms, Quizizz, Smartivity, Toppr, Unacademy, Upgrad ஆகியவை இந்த துறையில் சிறந்து விளங்கும் மற்ற கம்பெனிகளாகும். இது தவிர மாணவர்களை குறிவைத்து பல சிறப்பான கம்பெனிகள் மாநில அளவிலும் சிறந்து விளங்கி வருகின்றன.

இந்தியாவில் மாணவர்கள் எண்ணிக்கை கூடிவருவதால் இது போன்ற ஸ்டார்ட் அப் களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Spread the lovely business news