பல சமயங்களில் ஒரு முறை அணிவதற்காக  உடைகளை மிக அதிக பணம் கொடுத்து வாங்குவோரும் உண்டு. இவை ரூபாய் 10 ஆயிரம் முதல் 1,50,000 வரை மதிப்புள்ளதாக  இருக்கும். ஆமாங்க, கல்யாண ரிசப்ஷனுக்கு போடும் டிரஸ் இவ்வளவு ரூபாய்க்கும் வாங்குறவுங்க இருக்காங்க…. 

அவ்வளவு பணம் கொடுத்து வாங்கி, ஒருமுறை அணிந்த பிறகு அதை என்ன செய்வதென்று தெரியாமல் நன்றாக பேக் செய்து அலமாரியில் அடைத்து வைத்துவிடுவோம். அது ஒரு காட்சி பொருளாக இருந்து விடும். அல்லது இனிய அந்த நாள் நினைவுகளை நினைவு படுத்தும் பொருளாக மாறிவிடும்.   இது போன்று பலருக்கு பல சமயங்களில் நடந்திருக்கலாம்.  இதற்கு உதாரணங்கள் கூறப்போனால் கல்யாண ரிசப்ஷன், மெஹந்தி பங்க்ஷன், சங்கீத், கல்யாணம், திருவிழா, கல்யாணத்திற்கு முன்பு எடுக்கப்படும் போட்டோ ஷுட் போன்றவை.  

பலருக்கு பல சமயங்களில் ஒரு முறை அணிந்த உடைகளை மீண்டும் அணிவது பிடிக்காது. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான புதிய உடைகளை அணிவது பிடிக்கும். 

உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவுவதற்காகவே ஒரு ஸ்டார்ட் அப் முளைத்துள்ளது. ப்ளைராப் (FLYROBE) என்ற இவர்களின் இணையதளம் வித்தியாசமான இந்த விஷயத்தை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

லெகேங்கா, ஷெர்வானி, கோட், கெளவுன், சேலை, குர்தா, அனார்கலி  போன்ற பெண்களுக்கான உடைகளை இந்த கம்பெனி மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.  சில ஊர்களில் தங்கள் ஷோ-ரூம்களும்  வைத்திருக்கிறார்கள்.   

இது தவிர இந்தியாவின் புகழ்பெற்ற டிசைனர்கள் டிசைன் செய்த உடைகளையும் வாடகைக்கு என்று காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ப்ராண்டட் கம்பெனி ரெடிமேட் உடைகளையும் 4 நாள் முதல் 8 நாள் வரை வாடகைக்கு எடுக்கலாம்.  

உங்களிடமும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாங்கிய உடைகள் ஒரு முறை உபயோகப்படுத்தி விட்டு அப்படியே இருக்கும். அவை நன்றாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் மூலம் நீங்களும் வாடகைக்கு விடலாம். 

சிலர் தங்களிடம் இருக்கும் உபரிப் பணத்தில் விலை உயர்ந்த உடைகளை வாங்கி இவர்களிடம் வாடகைக்கு விட்டு அந்த உடைகள் வாங்கிய பணத்தை ஓரிரு வருடங்களில் சம்பாதித்து விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வைப்பதை விட இவை நல்ல வருமானத்தை தருகிறது ஆயிரக்கணக்கானோர் இப்படி சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் இணையதள முகவரி https://flyrobe.com

Spread the lovely business news