பாலிமர் டெக்னாலஜி பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் உதய்பூரை சேர்ந்த இந்த இளைஞர்கள் பாலிமர் டெக்னாலஜியை உபயோகப்படுத்தியிருக்கு விதம் தான் ஆச்சரியமானது. ஜப்பானியர்களையே வியக்க வைத்து 10 மில்லியன் டாலர் (70 கோடி ரூபாய்) உதவியும் அளித்து, ஜப்பானுக்கு சென்று இன்குபேஷனும் செய்ய கூறியிருக்கிறார்கள்.

அக்ரி ஸ்டார்ட் அப் ஆன் ஈ.எப்., பாலிமரின் கண்டுபிடிப்பு என்னவென்றால் சுற்றுப்புற சூழலுக்கு உதவும் பாலிமர் புரோடோ டைப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது தண்ணீரை உறிஞ்சி அதை சேமித்தும் வைக்கிறது.

உலகளவில் 50,000 பேர் கலந்து கொண்ட போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தண்ணீர் எப்போது பற்றாக்குறையாக இருக்கும் ராஜஸ்தானுக்கு, தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகத்தில் வந்த கண்டுபிடிப்புதான் இது.

சுற்றுப்புற சூழலுக்கு உதவும் இந்த பாலிமர் ஆரஞ்சு பழத்தின் பயோ வேஸ்ட், வெஜிடபிள் பயோ வேஸ்ட் ஆகியவற்றை வைத்து தயாரிக்கப்படுகிறது. இது விவசாய நிலத்தில் இடப்படுவதால் அது தண்ணீரை உறிஞ்சி நீண்டநாட்களுக்கு வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிலோ ரூபாய் 100 முதல் 120 வரை விற்கப்படுகிறது. தற்போதே இந்த ஸ்டார்ட் அப் லாபம் ஈட்டும் நிறுவனமாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

பல போட்டிகளில் இந்த நிறுவனம் வெற்றிகளை பெற்றிருக்கிறது.

www.efpolymer.com என்ற இணையதளத்தில் மேலும் விபரங்கள் பார்க்கலாம்.