நம் அனைவருக்கும் குழந்தைகள் என்றால் உயிர். ஆட்டிஸம், பெருமூளை வாதம் (செரிபரல் பாலஸி), பேச்சுத் திறன் குறைவு போன்ற குறைபாடு உள்ள குழந்தைகள் பேசும்போது, என்ன சொல்ல வருகிறது என பல நேரங்களில் நமக்குப் புரியாது. குழந்தை என்ன சொல்கிறது என்று புரியாமல் அதன் பெற்றோர்கள் தவித்துப் போவார்கள்.

குழந்தை சொல்வதைப் புரிந்துகொண்டு, அது கேட்பதை செய்யாதபோது, அந்தக் குழந்தைக்கு கோபம் அதிகமாகும், பிடிவாதங்கள் கூடும்.

இது போன்ற குறையுள்ள குழந்தைகள் என்ன சொல்ல வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க, சென்னை ஐஐடியில் உள்ள சில இன்ஜினியர்கள் சேர்ந்து அகுமென்டேட்டிவ் (augmentative) மற்றும் அல்டர்நேட்டிவ் கம்யூனிகேஷன் (alternative communication – AAC) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அந்த குழந்தையின் தசைகளின் இயக்கங்களை வைத்து அந்தக் குழந்தை என்ன சொல்ல வருகிறது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர். இது நடந்தது 2011 ஆம் ஆண்டு. அப்போது கம்ப்யூட்டர் மூலமாகத்தான் அந்தக் குழந்தை என்ன சொல்ல வருகிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. அறிவியல் வளர்ச்சியால் இப்போது, ஸ்மார்ட் போன் மூலம் தெரிந்துகொள்ளும் வகையில், ஒரு செயலியை (App) உருவாக்கியுள்ளனர்..

பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், அந்த குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள், சிகிச்சையளிப்பவர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து செயலியை சிறந்த முறையில் வடிவமைக்க இந்த பொறியாளர்கள் குழுவினர் பெருமுயற்சி எடுத்துள்ளனர்.

இந்த முயற்சியில் பல பொறியாளர்கள் இருந்தாலும் அஜித் நாராயணன், நாராயணன் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த செயலியை இப்போது, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 75 ஆயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துகின்றனர். இது 15 மொழிகளில் கிடைக்கிறது, தமிழிலும் கிடைக்கிறது. பல நாடுகளில், நம் மொழியில் இந்த செயலி இல்லையே என்று ஏங்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது. இது இலவச செயலி அல்ல, கட்டண சேவை என்பதை நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த செயலி பற்றி மேலும் விவரங்கள் பெற இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள் www.avazapp.com,  ஈமெயில் hello@avazapp.com

மொபைல் +91 6379 905790

குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் இந்த செயலிக்காக, சிறந்த கண்டுபிடிப்புக்கான ஜனாதிபதியின் உயரிய விருது இந்த கம்பெனிக்கு கிடைத்துள்ளது.

Spread the lovely business news
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •