அமேசான் நிறுவன பங்குகளில் எண்பது சதவிகிதத்துக்கும் மேலான பங்குகளை வைத்திருப்பவர்கள் வெளியில் இருப்பவர்கள். பூஜ்யத்தில் ஆரம்பித்து கடந்த 26 வருடங்களில் அந்தப் பங்குதாரர்களுக்கான சொத்தை 1 ட்ரில்லியன் டாலராக உருவாக்கியிருக்கிறோம். இந்தப் பங்குதாரர்கள் யார்? பென்சன் நிதி அமைப்பு – தீயணைப்பு, காவலர், பள்ளி ஆசிரியர் பென்சன் நிதிகள். 401(K)s – பரஸ்பர நிதி (இதுவும் அமேசானின் பங்குகளில் கொஞ்சம் வைத்திருக்கிறது), பல்கலைக்கழக அறக்கட்டளைகள் என இதற்கான பட்டியல் நீண்டு கொண்டே போகும். நாங்கள் சொத்தை உருவாக்கியதால் ஓய்வு பெறும்போது பெரும்பாலான மக்கள் சிறப்பாக ஓய்வு பெறுவார்கள். அதில் எங்களுக்கு அளவு கடந்த பெருமை இருக்கிறது. 

நாங்கள் வாடிக்கையாளர் மேல் கொண்டிருக்கும் அக்கறை  எங்களைப் பல பெரிய காரியங்கள் செய்ய அனுமதித்திருக்கிறது. அமேசானில் 10 பேர் இருந்தால் என்ன செய்ய முடியும், 1000 பேராக இருந்தால் என்ன செய்ய முடியும், 10,000 பேராக இருந்தால் என்ன செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும். இப்போது மில்லியன் பேராக இருக்கும்போதும் என்ன செய்ய முடியுமென்று எனக்குத் தெரியும். எனக்கு `கராஜ்’ தொழில்முனைவர்களை அதிகம் பிடிக்கும் – ஏனெனில் அவர்களில் நானும் ஒருவன். ஆனால் உலகத்துக்கு எப்படி சிறிய நிறுவனங்கள் தேவையோ அது போல பெரிய நிறுவனங்களும் தேவை. சில விஷயங்களை சிறிய நிறுவனங்களால் செய்ய முடியாது. நீங்கள் எவ்வளவு சிறந்த தொழில்முனைவோராக இருந்தாலும் உங்களால் முழுமையாக `ஃபைபரால் (Fiber)’ ஆன போயிங் 787 விமானத்தை கராஜில் தயாரிக்க முடியாது. 

எங்கள் நிறுவனத்தினுடைய அளவு சமூகப் பிரச்சனைகளில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த அனுமதித்திருக்கிறது. அமேசானும் வேறு சில நிறுவனங்களும் சேர்ந்து `பருவநிலை உறுதிமொழி’ எடுத்திருக்கிறோம். அதன் படி பாரீஸ் உடன்படிக்கையின் குறிக்கோள்களை பத்து வருடங்களுக்கு முன்னதாகவும் 2040 ஆண்டுக்குள் கார்பன் அளவை பூஜ்யம் என்கிற நிலைக்கும் கொண்டு வருவோம். இந்த உறுதி மொழியை நிறைவேற்றுவதின் ஒரு பகுதியாக நாங்கள் 1,00,000 எலக்ட்ரிக் டெலிவரி வாகனங்களை மிச்சிக்கனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ரிவியான் என்கிற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இதன் முதல்படியாக, 2022 ஆம் ஆண்டின் போது சுமார் 10,000 வண்டிகளும், 2030 ஆம் ஆண்டின் முடிவுக்குள் 1,00,000 வண்டிகளும் வாங்கத் திட்டமிட்டிருக்கிறோம். உலகளவில் அமேசான் 91 சூரிய ஒளி, காற்றாலை திட்டங்களை இயக்கி வருகிறது. இதன் மூலம் 2900 மெகாவாட்டுக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் 7.6 மில்லியன் MWh மின்சாரத்தை வருடந்தோறும் வழங்கி வருகிறோம். இது 6,80,000 அமெரிக்க வீடுகளின் மின்சார உபயோகத்துக்கு பயன்படக்கூடியதாக இருக்கிறது. `Right Now Climate Fund’ என்பதின் வாயிலாக உலகளாவிய மறுகாடமைப்பு திட்டத்தில் சுமார் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறோம். Appalachian Mountains பகுதியில் வனத்தையும் விலங்குகளையும், இயற்கையையும் பாதுகாப்பதற்காக ஏப்ரல் மாதம் உறுதியளித்த 10 மில்லியன் டாலரும் இதில் அடங்கும். நான்கு உலகளாவிய நிறுவனங்களான வெரிசான், ரெக்கிட் பென்கீசர், இன்ஃபோஷிஸ், ஓக் வ்யூ குழுமமும் பருவநிலை உறுதிமொழியில் சேர்ந்திருக்கிறது. கடந்த மாதம் அமேசான் `The Climate Pledge Fund’ என்கிற ஒன்றை 2 பில்லியன் டாலர் நிதியுடன் ஆரம்பித்திருக்கிறது. 

சமீபத்தில் நாங்கள் வாஷிங்டன் மாநிலத்தில் இருக்கும் புதிதாக திறக்கப்பட்ட எங்கள் தலைமையகக் கட்டிடத்தின் உட்புறத்தில் வீடற்றவர்களுக்கென ஒரு காப்பகத்தை ஆரம்பித்திருக்கிறோம். இது சியாட்டலை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மேரி ப்ளேஸின் லாபநோக்கற்ற அமைப்புக்காகச் செலவிடப்படவிருக்கும் முதலீடான 100 மில்லியன் டாலரில் ஒரு பகுதியாகும். இது எட்டு மாடிகளைக் கொண்டது. 200 குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்கும் வசதி உள்ளது. இதிலேயே மருத்துவ வசதியும் இருக்கிறது. 

அமேசான் ஃப்யூச்சர் என்ஜீனியர் என்கிற உலகளாவிய `குழந்தை முதல் பணிக்காலம்’ வரை திட்டத்தின் மூலம் குறைந்த பிரதிநிதித்துவமும், தகுதியற்றவர்கள் எனக் கருதப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் கணினி அறிவியல் கல்வியை வழங்குவதாகும். சிறந்த திறமை கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியாக நாங்கள் கருப்பினத்தவரின் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தீவிரமாக செயலாற்றி வருகிறோம். 

அமேசானை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை நான் நம்புகிறேன். நாம் அனைத்து பெரிய அமைப்புகளையும் பரிசீலனை செய்ய வேண்டும். அது நிறுவனங்களாக இருந்தாலும், அரசு ஏஜன்சிகளாக இருந்தாலும் அல்லது லாப நோக்கமற்றதாக இருந்தாலும் சரி. இந்தப் பரிசீலனையில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை சொல்லி இதை முடிக்க விரும்புகிறேன். 

இந்த நாட்டில் அமேசான் உருவானது ஒரு தற்செயலான நிகழ்வு இல்லை. இந்த பூமியில் எந்தவொரு இடத்தை விடவும் இந்த இடத்தில் ஆரம்பிக்கப்படும் புதிய நிறுவனங்கள் வளர்ந்து நன்கு செழிக்கும். நம்முடைய நாடு வளத்தையும் தற்சார்பையும் அடிமட்டத்திலிருந்து உருவாக்கும் கட்டமைப்பாளர்களையும் அணைத்துச் செல்லக்கூடியது.  நிலையான சட்டம், சிறப்பான பல்கலைக்கழக அமைப்பு, ஜனநாயகச் சுதந்திரம், ரிஸ்க் எடுப்பது என்கிற கலாச்சாரம் ஆகியவற்றோடு நாம் தொழில் முனைவோர்களையும் ஸ்டார்ட்-அப்களையும் வளர்க்கிறோம். நம்முடைய இந்த பெரிய தேசமானது பூர்ணத்துவதிலிருந்து மிகவும் விலகியிக்கிறது என்பதும் உண்மைதான். காங்கிரஸ் உறுப்பினரான ஜான் லூயிஸை நினைவில் வைத்துக் கொண்டு, அவரது மரபுக்கு மதிப்பளிப்பதைப் போலவே, நாங்கள் மிகவும் தேவைப்படும் `இன மதிப்பீட்டின்’ மத்தியில் இருக்கிறோம். பருவநிலை மாற்றம், வருமான சமத்துவமின்மை ஆகிய சவால்களையும் எதிர் கொண்டிருக்கும் நிலையில் நாம் உலகளாவிய தொற்றின் நெருக்கடியில் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும், அமெரிக்காவில் நம்மிடம் இருக்கும் அமுதத்தின் மிகச் சிறிய `உறிஞ்சலை’க் கூட உலகம் முழுவதும் நேசிக்கும். என் அப்பாவைப் போன்ற புலம்பெயர்ந்தோர் இந்த நாடு புதையல் நிறைந்த நாடு என நினைக்கிறார்கள் – அவர்களுக்கு முன்னோக்கு பார்வை இருக்கிறது, மேலும் இங்கேயே பிறந்த அதிர்ஷ்டசாலிகளான நம்மைக் காட்டிலும் அவர்கள் இதை இன்னும் தெளிவாகக் காணமுடியும். இது இன்னும் இந்த நாட்டிற்கான ’முதல் நாள்’, இன்றைய சவால்களை எதிர்கொண்டாலும் கூட, நான் இதைவிட ஒருபோதும் எங்கள் எதிர்காலத்தைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் இருந்ததில்லை.

இன்றைக்கு இங்கே உங்கள் முன் நான் தோன்றுவதற்கு வாய்ப்பு அளித்தமைக்குப் பாராட்டு தெரிவிப்பதோடு உங்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலும் மகிழ்சியடைகிறேன். 

(ஆதாரம்: அமேசான் இணையதளத்தின் `DAY ONE’ Blog)

இத்துடன் இந்த தொடர் நிறைவு பெறுகிறது.

Spread the lovely business news